திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவிலில் 26- 8- 2022 வெள்ளிக்கிழமை அன்று ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது
கீரனூரில் பிறந்த கருவூர் சித்தர் பல சிவன் கோவில்களுக்கு சென்று கடைசியாக திருநெல்வேலி அடைகிறார் .சூரியனின் அருள் பெற்றவர் நெல்லையப்பரை தரிசிக்கும் நேரத்தில் சுவாமி அவரிடம் பேசவில்லை. அதனால் கோபம் கொண்டு" ஈசன் இந்த இடத்தில் கிடையாது. இங்கே எருக்கு செடிகள் எழட்டும்" என்று சாபம் விட்டுவிட்டு மானூர் சென்று விடுகிறார்.
பிறகு நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சித்தருக்கு காட்சி தருகிறார் . அவர் எழுந்தருளிய நாளே ஆவணி மூல திருநாள் என்பதால் ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருவிழா மிகவும் சிறப்பாக நெல்லையப்பர் கோவிலில் கொண்டாடப்படுகின்றது.
இந்த வருடத்திற்கான ஆவணி மூல திருவிழா 26- 8 - 2022 வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது . காலை 7.30 மணி முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றம், 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்மன் வெள்ளி ரிஷப வாகன உலா, விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகன உலா, சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் உலா, சுப்பிரமணியர் மயில்வாகனம் மற்றும் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் திருநெல்வேலி நகரில் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வர இருக்கின்றனர் .
மேலும் தொடர்ந்து பல நாட்கள் விழா நிகழ இருக்கின்றது.
கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. விழாவின் ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவமணி மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.