செய்திக்குறிப்புகள்:
- நெல்லை 24 கிராம பஞ்சாயத்துகளிலும் மக்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைத்த கொடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- ரூ 6 கோடி மதிப்பில் 150 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி .எஸ். ஆர் ஜெகதீஷ் அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் ஆறு கோடி ரூபாய் மதிப்பில் 150 உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி எஸ் ஆர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார் .
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர் ஜெகதீஷ் தலைமை தாங்கி கூட்டத்தில் உரையாற்றினார் . அப்பொழுது அவர் பேசியதாவது ;
நாட்டின் மது போதை அதிலிருந்து மக்கள் சீரழிவதை தடுப்பதற்கும், மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 24 கிராம பஞ்சாயத்துகளிலும் மக்களுக்காக உடற்பயிற்சி கூடம் அமைத்த கொடுப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
இதற்கான தொடக்கமாக 150 உடற்பயிற்சி கூடங்கள் ரூ 6கோடி மதிப்பில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நெல்லையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விரைவாக ஸ்மார்ட் பகுப்பதை தொடங்கவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று வி.எஸ் ஆர் ஜெகதீஷ் கூறினார்.
துணைத் தலைவர் செல்வ லக்ஷ்மி அமிதாப், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கவுன்சிலர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.
Image source: dailydhanthi.com