செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் 1முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்
- 34 லட்சம் செலவில் மூன்று ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்படும் மேயர் தகவல்.
திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சி பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக 34 லட்சம் ரூபாய் செலவில் 3 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்ப்படும் என மேயர் சரவணன் அறிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சரவணன் தலைமை தாங்கி உரையாற்றினார் .அப்பொழுது அவர் பேசியதாவது ; நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று ஏற்கெனவே தமிழக முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதன்படியே இந்தத் திட்டம் அமைக்கப்பட உள்ளது . அதற்காக 34 லட்சம் ரூபாய் செலவில் மூன்று ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். என்று கூறினார்.
சாலை வசதி குடிநீர் பிரச்சனை போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தி பட்டது. குடிதண்ணீர் தட்டுப்பாடு நெல்லை மாநகர பகுதியில் அதிக அளவில் இருக்கின்றது. மேலும் குண்டும் குழியுமாக சாலைகள் மோசமாக இருப்பது பற்றியும் உடனே அதை சீர் செய்து தர வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி துணை மேயர் கே ஆர் ராஜு ஆகியோர் முன்னிலை வகிக்க , மண்டல தலைவர்கள் ரேவதி, பிரபு , பிரான்சிஸ், கதீஜா இக்லாம் பாசிலா , மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு இதில் பங்கேற்று பேசினார்கள்.
Image source: dailydhanthi.com