திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் சிவந்திபுரம் ஊராட்சி வராகபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது . தீர்த்தம் எடுத்து வருதல், செல்வ விநாயகருக்கு பூந்தட்டு எடுத்தல் , கும்பம் ஏற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாபநாசத்தில் இருந்து கிரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , உச்சிக்கால பூஜை, அன்னதானம், செல்வ விநாயகர் கோவிலுக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
அதன் பின்பு பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து முளைப்பாரி எடுத்து வருதல் வில்லிசை நிகழ்ச்சி , சாமக்கொடை என தொடர்ந்து விழாக்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.
Image source: dailythanthi.com