செய்தி குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு இடங்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சுகாதார மையங்கள் அமைக்க ஏற்பாடு.
- பாளையங்கோட்டை எம். எல். ஏ அப்துல் வஹாப் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி விழாவினை தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையங்கள் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதியதாக பன்னிரண்டு நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைப்பதற்கான திட்டத்தை அரசு ஏற்பாடு செய்துள்ளது .
மேலப்பாளையம் மண்டலத்தில் மவுண்ட்ரோடு பீடி காலனி பகுதிகள் மற்றும் பாளையங்கோட்டை மண்டலத்தின் சாந்தி நகர், ஆரோக்கியநாதபுரம் பகுதிகள் இவற்றில் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மேயர் பி. எம். சரவணன், துணைமேயர் கே ஆர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலை வகிக்க , பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் கலாம் தலைமை தாங்கினார்.
இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் பிரான்சிஸ் , கதீஜா இஸ்லாம் பாசிலா மாமன்ற உறுப்பினர்கள் , பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர்.