தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ளது சிவகாமி அம்பாள் உடனுறை திருமூலநாதர் சிவன் திருக்கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் வளாகத்தில் சென்னை - வேளச்சேரி அரிமா சங்கத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முறப்பநாடு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், பாலையா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, ஊர் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். திருமூலநாதர் பக்தர்கள் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் சார்பில் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று, பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.