செய்திக்குறிப்புகள்:
- வெள்ளூர் வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு.
- விவசாயிகள் ஆர்வமுடன் தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைத்துவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு திட்ட பணிகள் குறித்து களப்பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
இதில் வெள்ளுர் கிராமத்தில் புதிய நெல் ரக கருவிதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்ட அதிகாரிகள், அங்கு மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களை பற்றி விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளிடம் விளக்கிக் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) அல்லிராணி, துணை வேளாண்மை அலுவலர் சிவகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சண்முகம், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Image Source: dailythanthi