- சிவராத்திரி விழாவில் மாட்டு வண்டி பந்தயம்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மேலசிரியந்தூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலின் மகா சிவராத்திரி விழாவில் நேற்றுகாலை மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
இதில் பெரிய மாட்டு வண்டிகளுக்கான போட்டியை ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்களும், சிறிய மாட்டு வண்டிகளுக்கான போட்டியை செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.அருள் அவர்களும் துவங்கி வைக்க போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் முடிவில் இரண்டு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
Image source: dailythanthi.com