செய்திக்குறிப்புகள்:
தூத்துக்குடி மாவட்ட 32வது காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பேட்டி.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய திரு. ஜெயக்குமார் அவர்கள் சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை காவல்துறை துறை ஆணையாளராக பணியாற்றி வந்த திரு. பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட புதிய காவல்துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வந்த அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் 32 வது காவல்துறை கண்கானிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.