கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பூதப்பாண்டி சிவகாமி அம்மை உடனுறை பூதலிங்க சுவாமி திருக்கோவிலும் ஒன்றாகும். இங்கு வருடம்தோறும் தைப்பூசத்தை ஒட்டி வருடாந்திர உற்சவம் பத்து நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் கடந்த 09/01/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான கடந்த சனிக்கிழமை 15/01/2022 இரவில் பூதலிங்க சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், சிவகாமி அம்மை கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.