- தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.
- 135199 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ மருந்து செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகர நல அலுவலர் வித்யா, உதவி ஆட்சியர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, குழந்தைகள் நல மருத்துவர் அருணாசலம் உட்பட பல அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற போலியோ தடுப்பு முகாம் மூலம் 135199 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com