- மாசி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.
- திரளான பக்தர்கள் பங்கு பெற்று வழிபாடு.
வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாக திகழும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை பெற்றதாகும். இந்த கோவில் வளாகத்தில் உள்ள துளசி வனத்தில் தான் ஆண்டாள் குழந்தையாக தோன்றி, பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்து, சூடிக் கொடுத்த சுடர்கொடியாக புகழ் பெற்று, பரந்தாமனை திருமணம் புரிந்தாள்.
இத்தகைய பெருமைகளை பெற்ற திருவில்லிபுத்தூர் கோவிலில் நேற்று மாசி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார் - ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி சேவை சாதித்தருள பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று வழிபட்டனர்.
Image source: dailythanthi.com