- தூத்துக்குடியில் நேற்று காலை முதல் பரவலான மழை.
- உப்பளங்களில் மழை நீர் தேங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களிலும் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் வரை நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.
மேலும் இந்த மழை காரணமாக தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான மழை அளவு:
குலசேகரன்பட்டினம் - 3 செ.மீ, காயல்பட்டினம் - 2 செ.மீ,
சாத்தான்குளம் - 1 செ.மீ,
திருச்செந்தூர் - 1 செ.மீ.