- அரசியார்பட்டியில் 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு.
- அரசியார்பட்டியில் சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அள்ள அரசியார்பட்டி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலைமையில் நடைபெற்ற கள ஆய்வில் புதுக்குளம் கண்மாய் தென்கலுங்கு அருகில் கல் திட்டைகள், முதுமக்கள் தாழிகள், குத்துக்கல் ஆகிய பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை விலங்கு பறவைகள் இரையாய் உண்டபின் மீதம் இருக்கும் எலும்புகளை சேகரித்து, அதோடு ஈமப்பொருட்களையும் தாழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். இதைச் சுற்றி கற்களைக் கொண்டு கல்திட்டை, கற்பதுக்கை, கல்குவை, கல்வட்டம், குத்துக்கல் உள்ளிட்டவற்றை அமைப்பர் என்றும் தற்போது அரசியார்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்த நிலையில் சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதில் ஒரு தாழியின் வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ. ஆகும். மேற்பகுதி அரைவட்டமாக உள்ள 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ளன என்றும் விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் தொல்லியல் ஆய்வு தலைவர் ராஜாராமன் தெரிவித்தார்.
Image source: dailythanthi.com