- இருக்கண்குடி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி.
- ரூ.674429 காணிக்கையாக கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம்., சாத்தூர் அருகே உள்ள இருக்கண்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து காணிக்கைகள் மற்றும் நேர்த்தி கடன்களை செலுத்தி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவிலில் மாதத்திற்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இங்குள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதன் மூலம் பக்தர்களிடம் இருந்து ரூ.674429 ரொக்கப்பணமும், 302 கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் சாத்தூர், மதுரை, துலுக்கப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்க பக்தர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து உட்பட பலர் கொண்டனர்.
Image Source: dailythanthi.com