- விருதுநகர் மாவட்டத்தில் சிவராத்திரி விழா.
- குலதெய்வ கோவில்களில் மக்கள் சுவாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மகா சிவராத்திரி விழாவைெயாட்டி கிராம தெய்வங்களின் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கான்சாபுரம் அத்தி கோவில், கருப்பசாமி கோவில், கூமாபட்டி சப்பானி முத்தையா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அய்யனார் கோவில், மூவரைவென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற பூஜைகளில் பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர்.
Image source: Facebook.com