- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஜுரதேவர் சந்நிதி பிரசித்தி பெற்றது.
- இங்குள்ள ஜுரதேவருக்கு மிளகு அரைத்து பூசி, வெந்நீர் அபிஷேகம் செய்வது சிறப்பு.
சிவன் கோவில்களின் பிரகாரத்தில் வடக்கு நோக்கிய தனி சந்நதியில் காட்சித்தருபவர் ஜுரதேவர். இவர் மூன்று தலை, மூன்று கரங்கள் மற்றும் மூன்று கால்களுடன் காட்சித்தருவார். மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஜுரம் (காய்ச்சல்) நீங்க ஜுரதேவருக்கு மிளகு அரைத்து பூசும் வழிபாடு மேற்கொள்ளப்படுவது சிறப்பம்சம் ஆகும்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஜுரதேவருக்கு மிளகு அரைத்து பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் கடும் ஜுரத்தில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையின் பேரில் பக்தர்கள் பலர் வழிபாடுகளை மேற்கொள்வதை இன்றும் நாம் காணலாம்.
Image source: Facebook.com