சிவகாசி மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் பதவியேற்பு.
நாளை மாநகராட்சியின் முதல் மேயர் யார் என தெரியவரும்.
சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 48 கவுன்சிலர்களும் பதவி ஏற்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.
இந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியாக வந்து உறுதி மொழியை வாசித்து பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வருகை பதிவேட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டனர். இறுதியாக பதவியேற்ற கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மாநகராட்சி அந்தஸ்து உயர்வு பெற்ற பின்னர் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலை சிவகாசி சந்தித்துள்ள நிலையில், மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்க போவது யார் என்பது நாளை 04/03/2022 தெரியவரும்.