செய்திக்குறிப்புகள்:
- வியக்க வைக்கும் சிற்பக்கலை.
- யாளி சிற்பத்தின் வாயிற்குள் உருளும் உருண்டை கல்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அமைந்துள்ளது வானமாமலை பெருமாள் திருக்கோவில். வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாக திகழும் இந்த கோவில் தோதாத்ரிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
சுயம்வக்த சேத்திரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில் பல வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களை நாம் கண்டு ரசிக்க முடியும். அவற்றுள் கோவில் கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தவுடன் முன் மண்டபத்தின் படிக்கட்டுகளின் இருபுறமும் உள்ள யாளி சிற்பங்கள் காண வேண்டிய ஓன்றாகும். இந்த யாளி சிற்பங்களின் வாய்க்குள் உருளும் உருண்டை கல் இருக்கிறது. இதனை நாம் நம் கைகளால் தொட்டு உருட்ட முடியும் என்பது சிறப்பம்சம்.
Image source: Facebook.com