தமிழகத்தில் கடந்த வாரம் 21 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருநெல்வேலியில் காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்கள், சென்னையில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமை துறை ஆணையராகவும், வடசென்னை சட்டம் - ஒழுங்கு பிரிவில் இணை ஆணையராக பணியாற்றி வந்த திரு.துரைராஜ் அவர்கள், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகரின் காவல்துறை ஆணையராக புதிதாக நியமிக்கப்பட்ட திரு.துரைராஜ் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார்.