திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும். இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.
தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்:
1. பக்த ஸ்தலம்: சிவசைலம் ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில்.
2. மகேச ஸ்தலம்: வழுதூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
3. பிராண லிங்க ஸ்தலம்: கோடகநல்லூர் ஸ்ரீ அவிமுக்தீஸ்வரர் திருக்கோவில்.
4.ஞானலிங்க ஸ்தலம்: சிங்கிகுளம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்.
5. சரண ஸ்தலம்: மேலநத்தம் ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
6. சகாய ஸ்தலம்: ராஜவல்லிபுரம் ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில்.
7. பிரசாதி ஸ்தலம்: தென்மலை ஸ்ரீ திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோவில்.
8. கிரியாலிங்க ஸ்தலம்: அங்கமங்கலம் ஸ்ரீ நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோவில்.
9. சம்பத் ஸ்தலம்: காயல்பட்டினம் ஸ்ரீ மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில்.
10. பஞ்சாக்ர ஸ்தலம்: திற்பரப்பு ஸ்ரீ மகாதேவர் திருக்கோவில்.