திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் எட்டாம் திருநாளான நேற்று (15/02/2022) காலை சுவாமி அலைவாயுகந்த பெருமானும், சுவாமி குமரவிடங்கப்பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனங்களில் புறப்பட்டு, திருநெல்வேலி சாலையில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தனர். அங்கு வைத்து திருக்கண் சாத்தும் நிகழ்வு நடைபெற்ற பின்னர், மீண்டும் இருவரும் குதிரை வாகனங்களில் புறப்பட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோவில் சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்குபெற்று சுவாமி தரிசனம் செய்தனர்.