கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வடிவீஸ்வரம் அழகம்மை உடனுறை சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதலில் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் சுவாமி - அம்பாள் வீற்றிருந்து தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மதியம் 12.10 மணிக்கு மேல் தேர்கள் நிலையை அடைந்ததும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சுவாமி - அம்பாள் வெள்ளி இடப வாகனங்களில் எழுந்தருள சப்தாவர்ண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.