சிவகாசி மாநகராட்சியில் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 111 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 49 மையங்களில் ஆண்கள் மட்டும் வாக்களிக்கவும், 49 மையங்களில் பெண்கள் மட்டும் வாக்களிக்கவும், 13 மையங்களில் ஆண், பெண் என இருவரும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ள சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.பாபுபிரசாந்த் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிகளின் படி வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசிக்கப்பட்டது.