திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவின் ஐந்தாம் திருநாளான நேற்று 11/02/2022 இரவில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கர் - தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்மை - மயில் வாகனத்திலும் தட்டியால் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் எழுந்தருள குடவருவாயிலில் வைத்து தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து குமரவிடங்கர் மற்றும் தெய்வானை அம்மை ரத வீதிகளில் எழுந்தருள, ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி எதிர் சேவை கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.