தை மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குமிந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் தை மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு முப்பது நாட்கள் விரதம் இருந்து தென் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக திருக்குறுங்குடி மலைக்கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தி பெருமாளை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டின் தை மாத கடைசி சனிக்கிழமையான இன்று திருக்குறுங்குடி பெருமாளை தரிசிக்க திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம், மேலத்திடியூர், தச்சநல்லூர், ராஜபதி, கோட்டூர், கல்லூர், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளை சார்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக திருக்குறுங்குடிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.