தமிழகம் முழுவதும் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம்., அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் அன்று பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், அந்தந்த பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும், அவருக்குரிய சின்னங்களையும் பொருத்தும் பணி வாக்காளர்கள் மற்றும் கட்சி முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான திரு.மேகநாதரெட்டி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான திரு.பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.