திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசித் திருவிழாவின் நான்காம் திருநாளான நேற்று (10/02/2022) அதிகாலை 5.00 மணிக்கு கடற்கரை கோவிலின் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7.00 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் - தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்மை - வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனர். பின்னர் மாலை 6.00 மணிக்கு மேல் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்க பெருமான் - வெள்ளி யானை அம்பாரியிலும், தெய்வானை அம்மை - வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கு பெற்று அரோஹரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.