திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் வரும் 13/02/2022 அன்று பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு ஓவியப்போட்டி "மன்னுயிர் காப்போம்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது எல்.கே.ஜி - யு.கே.ஜி ஒரு பிரிவாகவும், ஒன்றாம் வகுப்பு - இரண்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், மூன்றாம் வகுப்பு - நான்காம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஐந்தாம் வகுப்பு - ஆறாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஏழாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஒன்பதாம் வகுப்பு - பத்தாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், பதினோராம் வகுப்பு - பன்னிரெண்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும் என மொத்தம் 7 பிரிவுகளில் நடைபெற உள்ளதாகவும், இந்த ஓவிய போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஓவியம் வரைய தேவையான A3 தாள் வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் மூன்று சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும், பயிற்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்துள்ளார்.