தூத்துக்குடி மாநகரில் உள்ளது பழம்பெருமை வாய்ந்த வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில். சங்கரராமேஸ்வரர் (சிவன்) கோவிலுக்கு அருகில் அமையப்பெற்றுள்ள பழமையான இந்த பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கல் தூண்களை சீரமைத்தல், மண்டபத்தை பழுது பார்த்தல், சுவாமி சன்னிதியை சீரமைத்தல், பிரகார மண்டபங்களை சீரமைத்தல் உட்பட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று தமிழக அமைச்சர் திருமதி.கீதாஜீவன் முன்னிலையில் திருப்பணி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பணி கமிட்டி தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.