மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழா நேற்று தென்காசியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக தென்காசி யானைப்பாலம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாமன்னர் திருமலைநாயக்கரின் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது உடன் பங்குபெற்ற நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.