திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.துரைராஜ் அவர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் திருநெல்வேலி மாநகர் தனக்கு புதிய இடம் என்பதால் அதுகுறித்த தகவல்களை தாம் சேகரித்து வருவதாகவும், மாநகரில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றச் செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை இணை ஆணையர்கள் டி.பி.சுரேஷ்குமார் (கிழக்கு மண்டலம்), கே.சுரேஷ்குமார் (மேற்கு மண்டலம்), நாகசங்கர் (நுண்ணறிவு பிரிவு), ஆய்வாளர் பிறைச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.