தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் நகராட்சியும், சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனை அடுத்து சிவகாசி மாநகராட்சியின் புதிய ஆணையராக பதிவியேற்றுக்கொண்ட திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று திருத்தங்கல் பகுதிக்கு நேரில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, வாருகால் வசதி, கழிப்பிட வசதி வேண்டும் என கூறி மனு அளித்தனர்.