தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிடமடைந்ததை அடுத்து மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளமும் வேகமாக நிரம்பி, தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.