விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற பட்டாபிராமர் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.