கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சுமார் இருபது மாதங்களுக்கு பின்னர் பேருந்து சேவைகள் நேற்று துவங்கியது. கொரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து இரண்டு மாநிலங்களுக்குமான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தமிழக அரசு பேருந்துகளும், கேரளா அரசு பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று காலை முதலே பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.