கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குழித்துறை ஆற்றிலும், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் மலைப்பகுதிகளில் உள்ள குற்றியாறு, கல்லாறு, மாங்காமலை உள்ளிட்ட பல கிராமங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.