- திருக்குறுங்குடி நம்பி கோவில் பங்குனி திருவிழா துவக்கம்.
- வரும் 27/03/2022 அன்று பங்குனி தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம்., திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார சேவைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் பங்குனி திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்:
18/03/2022 முதலாம் நாள்:
காலை: கொடியேற்றம்.
இரவு: பரங்கி நாற்காலியில் பெருமாள் வீதி உலா.
19/03/2022 இரண்டாம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா.
இரவு: சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதி உலா.
20/03/2022 மூன்றாம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் (முத்தங்கி சேவை) வீதி உலா.
இரவு: அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதி உலா.
21/03/2022 நான்காம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா..
இரவு: ஆதிசேஷன் வாகனத்தில் பெருமாள் வீதி உலா.
22/03/2022 ஐந்தாம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா (திருத்தேரில் கால் நாட்டுதல்).
இரவு: ஐந்து நம்பிகள் கருட சேவை.
23/03/2022 ஆறாம் திருநாள்:
மாலை: பெருமாள் தண்டியல் சேவை வீதி உலா.
இரவு: யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா.
24/03/2022 ஏழாம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா.
மாலை: சூர்ணோத்ஸவம் முடிந்து இந்திர விமானத்தில் பெருமாள்
வீதி உலா.
இரவு: பூம்பல்லக்கில் பெருமாள் வீதி உலா.
25/03/2022 எட்டாம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா.
இரவு: குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா (வேடுபறி உற்சவம்).
26/03/2022 ஒன்பதாம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா.
இரவு: சந்திரபிரபையில் பெருமாள் வீதி உலா (தேர் கடாட்சம் செய்தருளல்).
27/03/2022 பத்தாம் திருநாள்:
காலை: தேரோட்டம்.
இரவு: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் வீதி உலா..
28/03/2022 பதினோறாம் திருநாள்:
காலை: வெள்ளி தோளுக்கினியானில் பெருமாள் மாட வீதி புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி.
மாலை: வெற்றிவேர் சப்பரத்தில் பெருமாள் வீதி உலா.
Image source: dailythanthi.com