- பொருநை நெல்லை புத்தகத் திருவிழா - 2022.
- காணி குறும்படம் வெளியிடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 08.30 மணிக்கு காணி குறும்படம் வெளியிடும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் முன்னிலையில் காணி குறும்படத்தை வெளியிட்டனர். அப்போது அங்கு வருகை புரிந்திருந்த குறும்படத்தில் நடித்த காணியின மக்கள் ஆரவாரம் எழுப்பியும், கரவொலி எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் திரளான பார்வையாளர்கள் பங்கு பெற்று காணியின மக்களின் வாழ்க்கை முறையை பறைசாற்றும் அந்த குறும்படத்தை பார்வையிட்டு ரசித்தனர்.
Image source: Facebook.com