- பங்குனி உத்திர விழா கொண்டாட்டம்.
- திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு.
திருநெல்வேலிச்சீமை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் பங்குனி உத்திர தினமானது குலதெய்வ கோவிலில் வழிபாடு மேற்கொள்ளும் விழாவாக வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழா நாளன்று இம்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எங்கிருந்தாலும் தங்கள் சொந்த ஊருக்கு வந்து குல தெய்வ கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வருடம் பங்குனி உத்திர தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டும், நேர்த்திக் கடன்களை செலுத்தியும் சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், பாடப்பிள்ளையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கோவில், மறுகால்தலை கோவில், வெள்ளிமலை கோவில் உள்ளிட்ட முக்கிய சாஸ்தா கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
Image source: dailythanthi.com