- களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு.
- மார்ச்-20, 21, 22 ஆகிய மூன்று தினங்கள் தரிசிக்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற கோமதி அம்மை உடனுறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில். இங்கு வருடத்தில் இரண்டு முறை பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சூரிய ஒளி கதிர்கள் மூலவர் சத்தியவாகீஸ்வரர் மீது விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.
இந்நிலையில் இவ்வருட பங்குனி மாத சூரிய ஒளி நேற்று காலையில் சூரிய உதயத்தின் போது சத்தியவாகீஸ்வரர் மீது விழுந்தது. காலை 6.35 மணிக்கு கோவில் கொடிமரத்தில் மீது விழத் துவங்கி மெல்ல மெல்ல நகர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்க திருமேனி மீது விழுந்தது. அப்போது மூலஸ்தானமே செந்நிறத்தில் ஜொலித்தது. சுமார் 3 நிமிடம் நீடித்த இந்தநிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
இந்த அபூர்வ நிகழ்வு தொடர்ந்து இன்றும் (21/03/2022), நாளையும் (22/03/2022) காலை சூரிய உதய காலத்தில் நடைபெற உள்ளது.
Image source: dailythanthi.com