செய்திக்குறிப்புகள்:
- உலக வன நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
- நெல்லை மேயர் சரவணன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
உலக வன நாள் நேற்று கொண்டாடப்பட்டதை ஓட்டி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் மேயரான திரு.சரவணன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள், மாநகர பொறியாளர் திரு.நாராயணன் அவர்கள், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் திரு.லெனின் அவர்கள், கவுன்சிலர் திரு.சங்கர்குமார் அவர்கள், பரோடா வங்கி மேலாளர் திரு.வீரண்ணா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.