- நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மை கூட்டம்.
- பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 482 அரசு பள்ளிகளிலும் நேற்று மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களும், மேலாண்மை குழுவினரும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசினார்கள்.
திருநெல்வேலி டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி, பள்ளியின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல், பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளை மேலாண்மை குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Image source: dailythanthi.com