தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது சில நாட்களாக நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு 01/02/2022 தேதியான நேற்று முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. இதனை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 992 அரசு பள்ளிகள், 492 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு நடைபெற்றது. பல மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் நேற்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்ததை காணமுடிந்தது. இதனை அடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு பாடங்களை நடத்தினார்கள்.