திருநெல்வேலி மாநகரில் இன்று தை திருவோணத்தை முன்னிட்டு பஞ்ச கருட சேவை நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி திருநெல்வேலி நகரம் - கரியமாணிக்க பெருமாள், மேலத்திருவேங்கடநாதபுரம் - திருவேங்கடநாத பெருமாள், சங்காணி - வரதராஜ பெருமாள், மகிழ்வண்ணபுரம் - மகிழ்வண்ணநாத பெருமாள், திருநெல்வேலி நகரம் - லட்சுமி நரசிங்க பெருமாள் ஆகிய ஐந்து திருக்கோயில்களின் பெருமாள்களும் இன்று இரவு7.00 மணிக்கு மேல் கருட வாகனத்தில் எழுந்தருளி, நெல்லையப்பர் கோவில் தேர் வீதிகளில் ஒன்றாக உலா வந்து, தேரடியில் சேர்த்தியாகி பக்தர்களுக்கு தரிசனம் தர இருக்கிறார்கள்.