செய்திக் குறிப்புகள் :
- நெல்லை மாவட்டம் அடையகருங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் இருந்து சாமித்தோப்பு பக்தர்கள் பாதயாத்திரை
- பாதயாத்திரை குழு தலைவர் ஆதிநாராயணன் தொடங்கி வைத்தார்
நாராயணா எனும் நாமம் ஓதி, பக்தி சிந்தனையோடு நடந்து சென்று நாராயணனின் காலடி பற்றுகையில் கர்ம வினைகள் போக்கி, தழைத்தோங்கும் வாழ்வுதனை அவன் தருவான் எனும் நம்பிக்கையோடு ஒரு திருத்தலத்தில் இருந்து மற்றொரு திருத்தலத்திற்கு நடந்து செல்வதைதான் பாதயாத்திரை என்கின்றோம்.
திருநெல்வேலி , விக்கிரமசிங்கபுரம்
அடையகருங்குளத்தில் ஆண்டுதோறும் நடக்கக்கூடிய பாதயாத்திரையில் ஏராளமான சாமிதோப்பு பக்தர்கள் கலந்து கொண்டனர் .
அதன்படி இந்த ஆண்டு அடையக்கருங்குலம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
பாதயாத்திரை குழு தலைவர்கள் ஆதிநாராயணன் , செயலாளர் முத்தையா , பொருளாளர் மூக்கன் , பொறுப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விக்ரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதியான முதலியார்பட்டி ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி ஆறுமுகம் பட்டி , வெயிலு முத்தன்பட்டி புலவன் பட்டி, அகஸ்தியர்பட்டி, கட்டபுள தெரு , கஸ்பாசெட்டிமேடு ஆகிய ஊர்களிலிருந்து மக்கள் சாமிதோப்புக்கு மாலை அணிந்து ராமகோஷம் பாடிக்கொண்டு புறப்பட்டனர்.
பாதயாத்திரைக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன் என்ற பாண்டி துளசிராம் மாயாண்டி ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.