செய்திக் குறிப்புகள் :
- நெல்லையில் வள்ளியூர் அருகே திடீரென பரவிய காட்டுத்தீ
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் ஏர்வாடி ரோட்டில் சாமியார் பொத்தை அருகில் ஜெபத்துரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கின்றது.
அந்தத் தோட்டத்தில் முள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றி குவித்து வைத்திருந்தார். அதில் திடீரென்று தீ பிடித்தது. அடுத்த கணம் காட்டுத்தீ போல் பரவி மளமளவென்று எரிந்தது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . விரைந்து வந்து அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
நெருப்பு இன்றி மனிதன் வாழ முடியுமா! என்று பார்த்தால் நிச்சயமாக முடியாது. ஒளி இல்லாத இருண்ட உலகம் போன்று வாழ்க்கை அமைந்துவிடும். ஆனால் அதே பயனுள்ள நெருப்பு , சில சமயம் வான் போல் எழுந்து உயிரையும் பலிவாங்கும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் வள்ளியூரில் எழுந்த காட்டுத்தீ நல்ல வேளையாக உயிர்சேதம் இன்றி அணைக்கப்பட்டது.
மர்ம நபர்களின் வேலையா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.