கன்னியாகுமரி மாவட்டம்., பூதப்பாண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பூதலிங்கசுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி நடைபெறும் பத்து நாள் திருவிழா கடந்த 09/01/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி வீதி உலா, பகலில் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய மண்டகப்படி பூஜைகள் மற்றும் மாலையில் பக்தி சொற்பொழிவுகளுடன் கூடிய இன்னிசை கச்சேரிகள் நடைபெற்று வந்தன. இந்த விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு தேரோட்டம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்ததை அடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து துவங்கி வைக்க, பக்தர்கள் உற்சாகமாக பங்குபெற்று வடம் பிடித்து இழுக்க கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரிய தேர் என்ற சிறப்பை பெற்ற பூதப்பாண்டி தேரானது மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து ரத வீதிகளில் உலா வந்தது.