தென்காசி மாவட்டம்., குற்றாலத்தில் உள்ள அருவிகளில் கடந்த மூன்று நாட்களாக (14,15,16/01/2022) கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமையான நேற்று முதல் மீண்டும் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள், ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். கடந்த மூன்று நாட்களாக வெறிச்சோடி கிடந்த குற்றாலம் வீதிகளில் நேற்று மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால் கடை வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.