திருநெல்வேலி மாவட்டம்., திருப்புடைமருதூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற நாறும்பூநாதசுவாமி - கோமதி அம்மை திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு வருடம் தோறும் தைப்பூசத்தை ஒட்டி நடைபெறும் பத்து நாட்கள் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் திருநாள் தாமிரபரணியில் தீர்த்தவாரி உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வருடத்திற்கான தைப்பூச திருவிழா கடந்த 09/01/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஒன்பதாம் திருநாளான நேற்று நடைபெற வேண்டிய தேரோட்டம் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விதிமுறைகளை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும் இன்று தாமிரபரணியில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி உற்சவமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களும், உள்ளூர் மக்களும் வருத்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.